வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் வந்தே பாரத் சிறப்பு விமான சேவை மூலம் நாடு கொண்டுவரப்படுகின்றனர். வளைகுடா நாடான குவைத்தில் சுமார் 30 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை இந்தியாவுக்கு மீட்டுவர கால தாமதம் ஆகிவருகிறது.
இது தொடர்பான பொதுநல மனு உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் இன்று (அக். 27) விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு, "குவைத்திலிருக்கும் இந்தியர்களை மீட்டுவர விரைவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் களமிறக்கப்படும். அதற்காக 83 விமானங்கள் தயாராக உள்ளன" எனக் கூறியுள்ளது.
இதுவரை வந்தே பாரத் திட்டம் மூலம் 559 விமானங்களில் சுமார் 87 ஆயிரத்து 22 இந்தியர்கள் நாடு கொண்டுவரப்பட்டுள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டினர் சவுதி அரேபியா வர இனி அனுமதி