புதுச்சேரியில் நேற்று (மே 25) முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு கோவிட்-19 வரி விதிப்பால் புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மதுபானங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
இதைப்போல் அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு மது வாங்க வருவோர் எண்ணிக்கை வழக்கமாக அதிகமாக இருக்கும். ஊரடங்கால் அந்த மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிமாநிலத்தவர் வரமுடியவில்லை.
மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகள் வெறிச்சோடி உள்ளன. நேற்று மட்டும் புதுச்சேரியில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மதுபானக் கடைகளில் இரண்டாவது நாளாக இன்று காலை முதல் பெரிய அளவில் எந்த வியாபாரமும் நடக்கவில்லை என்றும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.