ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சராக இருந்தவர் ஹிலால் ராதர். தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இவரது மகன் அப்துல் ரஹீம் ராதர்.
இவர் மீது வங்கியில் ரூ.177 கோடி மோசடி செய்ததாக புகார் உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் இன்று அவரை கைது செய்தனர். 2012ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் வங்கியில் இந்த ஊழல் நடந்துள்ளது. அப்போது ஹிலால் ராதர் மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்துள்ளார்.
இந்த வழக்கில் ஹிலால் ராதர் மீதும் குற்றஞ்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் ஆஜர்