ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டம் காஷிபுக்கா பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு, ஒரு வயதில் மோஹ்ரினி என்ற குழந்தை இருந்துள்ளது. இக்குழந்தை இன்று (நவ.7) காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிப் பெட்டியின் கம்பியை (TV wire) இழுத்து விளையாடியுள்ளது.
அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப்பார்த்த மோஹ்ரினியின் தாயார் கதறி அழுதது, அருகில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காஷிபுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
'கடவுளுக்கே முகமூடி' - பிரதமர் மோடி தொகுதியில் சிவனுக்கு வந்த சோதனை!