கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான பேரிடர் காலத்தில் கூட குழந்தைகள் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் 898 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் வெளியிடப்பட்ட அவசர எண்ணான 1098 மூலம் 898 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அவசர எண் மூலம் தெரிவிக்கப்பட்ட 18,200 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெரும்பான்மையான புகார்கள் வந்துள்ளது.
-
Childline 1098 - @MinistryWCD’s emergency helpline for children prevented 898 child marriages during lockdown & made necessary interventions in response to over 18,200 calls.
— Smriti Z Irani (@smritiirani) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
If you know of any child in distress, please reach out to us on Childline 1098. pic.twitter.com/TWu2DdIqmV
">Childline 1098 - @MinistryWCD’s emergency helpline for children prevented 898 child marriages during lockdown & made necessary interventions in response to over 18,200 calls.
— Smriti Z Irani (@smritiirani) April 29, 2020
If you know of any child in distress, please reach out to us on Childline 1098. pic.twitter.com/TWu2DdIqmVChildline 1098 - @MinistryWCD’s emergency helpline for children prevented 898 child marriages during lockdown & made necessary interventions in response to over 18,200 calls.
— Smriti Z Irani (@smritiirani) April 29, 2020
If you know of any child in distress, please reach out to us on Childline 1098. pic.twitter.com/TWu2DdIqmV
குழந்தைக் கடத்தல், குழந்தைத் தொழிலாளி, பாலியல் வன்முறை போன்ற புகார்களே அழைப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு குழந்தைகளுக்கு உணவளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். உலகில் அதிகப்படியான குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுவதாக யுனிசெப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஓராண்டில், 18 வயதுக்குக் கீழான 1.5 மில்லியன் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெறுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 15 முதல் 19 வயதுடைய 16 விழுக்காடு பெண்கள் திருமணம் ஆனவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் சில தளர்வுகள்? - விரைவில் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு