கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக தொழிலதிபர்கள், பொதுமக்கள் தாராளமாக நிதி அளிக்க முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் புதுச்சேரியில் தொழிலதிபர்கள் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நிதி அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி தையல்நாயகி, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனக்கு வந்த முதியோர் உதவித் தொகையான 3000 ரூபாயை, புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்திட, பல்வேறு தடைகளையும் தாண்டி கடந்த 3 நாட்களுக்கு முன் வந்து கொடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் பணமாக பெறமாட்டார்கள் என்பதால், அன்று வீடு திரும்பினார். இதனையடுத்து இன்று மீண்டும் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் வந்த அந்த மூதாட்டி முதலமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்திது 3000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதையும் படிங்க...பிளாஸ்மா சிகிச்சை: கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீளும் மூன்று இந்திய அமெரிக்கர்கள்!