உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா-ஆக்ரா பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலை யமுனா அதிவிரைவுச்சாலை. இன்று காலை நொய்டாவிலிருந்து ஆக்ரா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
யமுனா அதிவிரைவுச் சாலை 2012ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவ் அம்மாநில முதலமைச்சராக இருந்தபோது திறக்கப்பட்டது.