ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் 64 காவலர்களுக்குக் கரோனா! - மகாராஷ்டிரா கரோனா வைரஸ்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 12 காவல் துறை உயர் அலுவலர்கள் உட்பட 64 காவலர்களுக்குக் கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

64-police-personnel-of-maharashtra-found-corona-positive

author img

By

Published : Apr 22, 2020, 5:03 PM IST

Updated : Apr 22, 2020, 5:26 PM IST

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 19,984 பேர் பாதிக்கப்பட்டும், 640 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான், கரோனா வைரஸின் தாக்கம் படுமோசமாக உள்ளது.

அம்மாநிலத்தில் இதுவரை 5 ஆயிரத்து 218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 251 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கும் கரோனா தொற்று பரவி வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 12 காவல் துறை உயர் அலுவலர்கள் உட்பட 64 காவலர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், மும்பை நகரில் மட்டும் 34 காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்

Last Updated : Apr 22, 2020, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.