ETV Bharat / bharat

ரயிலில் அடிப்பட்டு 33 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிரிழந்த யானை - சோக பின்னணி! - ரயிலில் அடிப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ele
author img

By

Published : Sep 29, 2019, 8:03 PM IST

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் நக்ராகடா வழித்தடத்தில் நேற்று முன் தினம் காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தது, ஆனால் வேகமாக வந்த ரயில் யானை மீது மோதியது. இதில் யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் யானையின் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தது. உடம்பில் ஏராளமான காயங்களுடன் எழுந்து கூட நிற்க முடியாத நிலையில், ரத்தம் வழிய அந்த யானை தண்டவாளத்திலிருந்து மெதுவாக தவழ்ந்து காட்டுக்குள் சென்றது.

இந்த விபத்தால் ரயிலின் எஞ்சின் பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், காயமடைந்த யானைக்கு அங்கேயே முகாமிட்டு சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டதாகவும், வலியால் அந்த யானை கதறித்துடித்தது என வனத்துறை அலுவலர்கள் கூறினர். எனினும், சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ரயில் மோதி உருக்குலைந்த யானை மனதை ரணமாக்கும் வீடியோ

விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாடும் பகுதியாகும். 2015-16 ஆண்டில் அப்பகுதியில் 25 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு விபத்து குறைந்ததால், ரயில் வேகத்தை 50 கிமீ ஆக அதிகரிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டு, தற்போது வரை 50 கி.மீ வேகத்தில் ரயில்கள் அங்கு இயக்கப்படுகிறது.

உடம்பில் ஏராளமான காயங்களுடன் நிற்கும் யானை

இந்நிலையில், இந்த விபத்து நடைபெற்ற போது, அங்கிருந்த ரயில் பயனிகள் சிலர், எழுந்து கூட நிற்க முடியாமல் காயமடைந்திருந்த யானையை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.