உத்தரப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு, உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நிரப்படும் என்று அம்மாநில அரசின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் காலியாக உள்ள 69 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை கடந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியது. இதனைத் தொடர்ந்து பொதுபிரிவினருக்கு 65 விழுக்காடு இட ஒதுக்கீடும், பின்தங்கியவர்களுக்கு 60 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அறிவித்தது.
இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பிற ஒதுக்கப்பட்ட பிரிவுகளை எதிர்த்து மாணவர்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, கடந்த மார்ச் 29ஆம் தேதி மாநில அரசுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக, ஆலோசிக்க நாளை முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், நீதிமன்ற உத்தரவின் பெயரில் காலியாக ஆசிரியர் பணியிடங்களை ஒரு வாரத்திற்குள்ளும், வெவ்வேறு துறையிலும் உள்ள மற்ற காலியிடங்களை மறுஆய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் பதவிகளை நிரப்புவதற்கான செயல் திட்டமும் வகுக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: திருக்குறள் ரெபரென்ஸ்...கார்ப்பரேட்டுகளுக்கான நாடாகும்" - திருச்சி சிவா விமர்சனம், கடும் அமளியில் மாநிலங்களவை!