நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகின்றது. இதனிடையே கரோனா குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் சங்கம் சார்பாக அரசிடம் கோரிக்கைவைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு கரோனா பரிசோதனை முகாமை சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ஒருங்கிணைத்தார். இந்த முகாமில் 171 பேர் கலந்துகொண்டனர்.
இதன் முடிவுகள் இன்று வந்ததையடுத்து, 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் வினோத் பேசுகையில், ''இதுவரை வந்த முடிவுகளின்படி 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இன்னும் பலருக்கு முடிவுகள் வருவதற்காகக் காத்திருக்கிறோம். இதையடுத்து பல்வேறு ஊடகவியலாளர்களையும் வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கரோனா!