மாநிலங்களவைக்கு புதிதாக 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இவர்கள் இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, கே.முனுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று (ஜூலை21) பதவியேற்றுக்கொண்டனர்.
கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பதவியேற்பு விழாவில் தகுந்த இடைவெளி உள்ளிட்ட இதர தனிநபர் பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த உறுப்பினர்கள் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாகவும், இவர்களுக்கு தேநீர் விருந்தளித்து பிரதமர் நரேந்திர மோடி உபசரிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் வழக்குரைஞர் இளங்கோ ஆகும்.
இதையும் படிங்க: தேர்வு செய்யப்பட்ட 45 உறுப்பினர்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்பு!