அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் தேபன் தத்தா. தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளிக்கு இவர் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, தொழிலாளர் இறந்ததை காரணம் காட்டி மருத்துவர் தத்தாவை கும்பல் ஒன்று படுகொலை செய்தது.
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த, பல மருத்துவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில், 25 பேர் குற்றவாளிகள் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தண்டனை குறித்த விவரம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே துறையின் வேகத்தை மேம்படுத்த திட்டம்!