பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து யாத்ரீகர்கள் 133 பேர் ஒடிசா பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டனர். இந்தக் குழுவில் 70 ஆண்கள், 50 பெண்கள் உள்ளனர். மீதமுள்ள 13 பேர் பெண்கள். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன3) ஒடிசா பூரி ஜெகன்நாதர் ஆலயத்துக்கு வந்தனர்.
இவர்கள் இன்று (ஜன. 5) வாரணாசியிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்புகின்றனர். இந்தக் குழுவினர் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்தனர்.
இந்தியப் பயணம் குறித்து பேசிய பாகிஸ்தான் பக்தர், “பூரி ஜெகன்நாதரை தரிசிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால கனவு. எனினும் நுழைவுஇசைவு (விசா) பெறுவதில் சில சிக்கல்கள் இருந்தன. எனது பயணத்தை எளிதாக்கிய இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மற்றொரு பெண் பக்தை, “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு இயல்பாக்கப்பட வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: துணிப்பைகளைக் கொண்டு வந்த பக்தர்களுக்கு தங்க நாணயம் பரிசு!