இது தொடர்பாக டெல்லியில் நேற்று (ஜூலை 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தாண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துவருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள முக்கியமான பகுதிகளாக பிகார், அஸ்ஸாம் மாநிலங்கள் உள்ளன.
நேபாளத்தின் தேராய் பிராந்தியத்தில் பெய்யும் மழையால் பிகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 122 குழுக்கள் 20 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் அஸ்ஸாம் மாநிலத்திற்கு 16 குழுக்களும் பிகார் மாநிலத்திற்கு 21 குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாக அஸ்ஸாமில், மட்டும் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் மூலம் மீட்பு பணியை மேற்கொள்ளும் அளவிற்கு சூழல் ஏற்படவில்லை. தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள், தனிமனித பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு, மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்" என்றார்.