அகமதாபாத் நகரம் கரோனா வைரஸின் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகியுள்ளது. அதிகபட்ச கரோனா தொற்று ஜமல்பூரில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஜமல்பூரில் வசிக்கும் சிப்பா சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெருமளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 13 ஆம் தேதிவரை அச்சமூகத்தைச் சேர்ந்த 53 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாதில் கரோனா தொற்றால் உயிரிழந்த 446 உயிரிழப்புகளில், இது 12 விழுக்காடாகும். சிப்பா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அகமதாபாத்தின் கோல் லிம்டா, ஜமல்பூர், ரெய்காட் ஆகியப் பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவருகின்றனர். இந்தப் பகுதிகள் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதியாகும்.
சிப்பா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்பேர் கரோனா தொற்றுக்கு உள்ளானதும், அகமதாபாத் நிர்வாகம் கோல் லிம்டா பகுதியில் சிப்பா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கியது. இதில், அறிகுறியற்ற கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களுக்கிடையில், கரோனா வைரஸ் தொற்று பிற காரணிகளால், சிபா சமூகத்தைச் சேர்ந்த 130 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திட்டங்கள் கடைநிலை வரை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்க - மாயாவதி