இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் ஆகியவை கோவிட்-19 தடுப்பூசிகளாகப் பயன்பட்டில் உள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பாரத் பயோட்டெக் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள்
ஆய்வுத் தகவலின்படி, கோவாக்சின் தடுப்பூசி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக 77.8% பலன் தரும் எனவும், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2% பலன் தரும் என தெரியவந்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 12% பேருக்கு பொதுவான பக்கவிளைவுகளும், அரை விழுக்காட்டுக்கும் குறைவான நபர்களுக்கு தீவிர பக்கவிளைவுகளும் காணப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாகவும், உலக மக்களை காக்க இந்தியாவின் கண்டுபிடிப்பு உதவுவதில் பெருமை கொள்வதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடா? மீண்டும் விசாரணை