ETV Bharat / bharat

திருமணத்திற்கு மறுத்த காதலியை 15 முறை கத்தியால் குத்திய காதலன் - திருமணத்திற்கு மறுத்த காதலிக்கு கத்திக் குத்து

பெங்களூருவில் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை 15 முறை கத்தியால் குத்திய காதலனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் திருமணத்திற்கு மறுத்த காதலியை கத்தியால் குத்திய காதலன்

author img

By

Published : Mar 1, 2023, 12:25 PM IST

பெங்களூர் (கர்நாடகா): பெங்களூருவில் வசித்து வந்த ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா பவித்ரா நீலமணி என்ற பெண் நேற்று (பிப்.29) அவரது காதலனால் 15 முறை கத்தியால் குத்தப்பட்டார். இவரது காதலன் தினகர் பனாலா, திருமணம் செய்ய லீலா மறுத்ததால் அவரை கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூரு போலீசார் தரப்பில், சாதி காரணத்தால் லீலாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. லீலா தனது காதலரிடம் இதைத் தெரிவித்தபோது, ​​அவர் கோபமடைந்துள்ளார். இதனிடையே லீலா அவரது காதலனிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினகர் பனாலா, லீலா பவித்ரா பணிபுரியும் அலுவலகத்திற்கு முன்பு அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அலுவலகம் முன்பு இந்த கொடூர தாக்குதல் நடந்ததால், இது குறித்து அவரது சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். லீலாவுக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள லீலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் பணிபுரியும் அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வீடியோ: கேரள கோயிலில் எந்திர யானை.. வியப்பில் பக்தர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.