ETV Bharat / bharat

அட்லூரி ராம்மோகன் ராவ் காலமானார் - ராமோஜி பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநர்

ராமோஜி பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற அட்லூரி ராம்மோகன் ராவ் காலமானார்.

அட்லூரி ராம்மோகன் ராவ் காலமானார்
அட்லூரி ராம்மோகன் ராவ் காலமானார்
author img

By

Published : Oct 22, 2022, 4:11 PM IST

Updated : Oct 22, 2022, 8:10 PM IST

ஹைதராபாத்: ராமோஜி பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அட்லூரி ராம்மோகன் ராவ் (87). இவர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (அக். 22) அவர் காலமானார். இறுதிச் சடங்குகள் நாளை (அக். 23) காலை 10 மணிக்கு ஜூப்ளி ஹில்ஸில் உள்ள மகா பிரஸ்தானத்தில் நடைபெறுகிறது.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் அஞ்சலி

அட்லூரி ராம்மோகன் ராவ், 1935 ஆம் ஆண்டு கிருஷ்ணா மாவட்டம் பெடபருபுடியில் பிறந்தார். அவர் 1975 இல் ஈநாடு நாளிதழில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது நண்பர் ராம்மோகன் ராவின் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் அஞ்சலி செலுத்தினார்.

Last Updated : Oct 22, 2022, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.