ETV Bharat / bharat

முதல் முறையாக குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர் கைது.. அஸ்ஸாம் போலீஸ் அதிரடி..

அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தில் கலந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர் கைது

author img

By

Published : Feb 10, 2023, 3:22 PM IST

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதுவரை குழந்தை திருமணத்தின்போது, மணமகன், பெற்றோர் மட்டுமே கைது செய்யப்பட்டவந்த நிலையில், முதல் முறையாக திருமணத்தில் கலந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போங்கைகான் மாவட்டம் சுப்பாரிகுரி கிராமத்தை சேர்ந்த ஜாஹிர் அலி மண்டல் என்பவர் அவரது சகோதரியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இது குழந்தை திருமணம் என்பதால், மணமகன், பெற்றோருடன் இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருமணத்தை இவர் தலைமை தாங்கி நடத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று (பிப்.10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளார். அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக 2,666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தை திருமணத்திற்கு எதிரான எங்களது நடவடிக்கை காரணமாக 2,666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். இதற்காக மாநில மக்களின் ஆதரவை கோருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 23 சதவிகித குழந்தைத் திருமணங்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ளதும் சிறு வயதிலேயே தாய்மை அடைவதால் தாய், சேய் உயிரிழப்பு விகிதம் அதிகரித்திருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக அஸ்ஸாமில் 20-24 வயதுக்குட்பட்ட பெண்களில் 31.8 சதவீதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தேசிய சராசரியான 23.3 சதவீதத்தை விட அதிகமாகும். இதனடிப்படையில், மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கான கொள்கையை வகுப்பதற்காக மாநில அமைச்சரவையில் ரனோஜ் பெகு, கேஷாப் மஹந்தா மற்றும் அஜந்தா நியோக் ஆகிய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முடிவுகளின் அடிப்படையில், கைது நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'காவலரிடமே கைவரிசையா'... காவல் துறை வாகனத்தை திருடியவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.