டெல்லி: கரோனா வைரஸ் பரவல் காரணமாக, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள நினைவு சின்னங்கள், சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
கரோனா பரவல் தொற்று குறையாத நிலையில், இந்த உத்தரவு ஜூன் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை(ஜூன்.16) முதல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுபாடுகள் தொடர்பான நிலையான வழிகாட்டுதல் நடைமுறை வெளியிடப்பட்டுள்ளன.
மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக உத்தரவுகளுக்கு உட்பட்டு, திறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள 3,700 நினைவு சின்னங்கள், 50 அருங்காட்சியகங்கள் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: ஏழைகளின் ஊட்டியைத் திறக்கத் தடை: வியாபாரிகள் வேதனை