மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி அதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவையை சுற்றி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாஜகவினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு முன் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கும் காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சட்டப்பேரவை எதிரிலுள்ள பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை': கமல்ஹாசன்