அமராவதி: கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், பல்வேறு தேர்வுகள் ஆன்லைனிலும் நடத்தப்பட்டுவந்தன. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்த பிறகு தற்போது சில தேர்வுகள் மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் ஏபிபிஎஸ்சி (Andhra Pradesh Public Service Commission) தேர்வானது கரோனா அச்சுறுத்தல் காரணமாக முழுவதும் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.
இந்தியாவில் முதல் முறையாக அரசுப் பணிகளுக்கான தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. இங்கு தேர்வுத் தாள்களுக்கு மாற்றாக டேப்லெட் மூலம் தேர்வுகள் நடைபெற்றன. மேலும், தேர்வுகளுக்கான தேர்வுத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையிலேயே மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒருமுறை பதிவு செய்தால் தேர்வுகள் அறிவிக்கப்படும்போது தேர்வுகளை எழுதலாம் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனை தற்போது ஆந்திர அரசும் பின்தொடர்கிறது.
இந்த புதிய தேர்வு நடைமுறை தேர்வர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அலைச்சல், செலவுகளை குறைப்பதுடன், வேலைப்பளுவையும் வெகுவாக குறைத்துள்ளதாகவும், இந்தத் தேர்வுகளில் முறைகேடுகள் வெகுவாக தடுக்கப்படுகின்றன எனவும் ஏபிபிஎஸ்சி செயலர் ஆஞ்சநேயலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய தொழில்நுட்ப பயன்பாடு