ஹைதராபாத்: Anandh Mahindra offers for Common Man: மஹாராஷ்டிரா மாநிலம், சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த தத்தாராயா லோகர் என்பவர், தன் மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சிறிய நான்கு சக்கர வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
பழைய உலோகப் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்களைக் கொண்டு இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார்.
அனைவருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அது போல லோஹரின் மகனுக்கும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. இந்த கனவினை நிறைவேற்ற லோகரிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை. இருப்பினும், மகனின் ஆசையை நிறைவேற்ற லோகர் முயன்றார்.
இந்த முயற்சியின் விளைவாக, அவரே தன்னிடம் உள்ள உலோகப் பொருட்களைக் கொண்டு புது மாதிரியான வாகனம் தயாரிக்கத் தொடங்கினார்.
2 ஆண்டுகால உழைப்பு
இதற்கானப் பணிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே லோகர் தொடங்கி உள்ளார். இதற்கான பாகங்களுக்காக அவரிடமிருந்த பழைய உலோகங்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தின் உதிரிகளைப் பயன்படுத்தி உள்ளார். மேலும் தேவையான, மீதான பகுதிகளை வெளியில் வாங்கியுள்ளார்.
அயராத 2 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு, கிக்கரால் இயங்கும் நான்கு சக்கரங்கள் கொண்ட மினி ஜீப்பை வடிவமைத்தார்.
இந்த வண்டியை இயக்கும் முறைகளைப் பற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இந்த வாகனம் டாடாவின் நானோவை விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
This clearly doesn’t meet with any of the regulations but I will never cease to admire the ingenuity and ‘more with less’ capabilities of our people. And their passion for mobility—not to mention the familiar front grille pic.twitter.com/oFkD3SvsDt
— anand mahindra (@anandmahindra) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This clearly doesn’t meet with any of the regulations but I will never cease to admire the ingenuity and ‘more with less’ capabilities of our people. And their passion for mobility—not to mention the familiar front grille pic.twitter.com/oFkD3SvsDt
— anand mahindra (@anandmahindra) December 21, 2021This clearly doesn’t meet with any of the regulations but I will never cease to admire the ingenuity and ‘more with less’ capabilities of our people. And their passion for mobility—not to mention the familiar front grille pic.twitter.com/oFkD3SvsDt
— anand mahindra (@anandmahindra) December 21, 2021
ஆச்சரியமடைந்த ஆனந்த் மஹிந்திரா
சமூக வலைத்தளங்களில் பரவிய காணொலியை அடுத்து மஹிந்திரா கார்களின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் அக்காணொலியைப் பதிவிட்டு, லோகரை பாராட்டியிருந்தார்.
தற்போது அந்த ஜீப்பை தனக்குத் தர கோரிக்கை விடுத்துள்ளார். அதற்குப் பதிலாக சுமார் 7 லட்சம் மதிப்புள்ள பொலிரோ காரை தருவதாகக் கூறியுள்ளார். இந்த விஷயம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:School Accident: பள்ளி விபத்தில் ஆசிரியர்களின் மனசாட்சியற்ற செயல் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருத்தம்