துரக்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் துர்காபூரில் வைத்து, பரிவர்தான் யாத்திரையை (Parivartan Sanklap Yatra) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (செப்.3) தொடங்கி வைத்தார். இதனையடுத்து நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “கடந்த இரு நாட்களாக INDIA கூட்டணியினர் சனாதன தர்மத்தை அவமதித்து வருகின்றனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சனாதன தர்மம் குறித்து பேசி வருவது வாக்கு வங்கிக்காக மட்டுமே. இவ்வாறு அவர்கள் (எதிர்கட்சிகள்) சனாதன தர்மத்தை எதிர்ப்பது முதல் முறை அல்ல. முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பட்ஜெட்டில் முதல் உரிமை சிறுபான்மையினருக்கு என கூறினார்.
ஆனால், முதல் உரிமை என்பது ஏழை, பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு என நாங்கள் கூறுகிறோம். தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறுகின்றனர். அவர்கள் சனாதன தர்மத்தை அவமதித்து உள்ளனர்.
-
राजस्थान के डूंगरपुर में @BJP4Rajasthan की 'परिवर्तन संकल्प यात्रा' के शुभारंभ कार्यक्रम से लाइव...#राजस्थान_चाहे_परिवर्तन https://t.co/bvh9m11lOL
— Amit Shah (@AmitShah) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">राजस्थान के डूंगरपुर में @BJP4Rajasthan की 'परिवर्तन संकल्प यात्रा' के शुभारंभ कार्यक्रम से लाइव...#राजस्थान_चाहे_परिवर्तन https://t.co/bvh9m11lOL
— Amit Shah (@AmitShah) September 3, 2023राजस्थान के डूंगरपुर में @BJP4Rajasthan की 'परिवर्तन संकल्प यात्रा' के शुभारंभ कार्यक्रम से लाइव...#राजस्थान_चाहे_परिवर्तन https://t.co/bvh9m11lOL
— Amit Shah (@AmitShah) September 3, 2023
நரேந்திர மோடி வெற்றி பெற்றால், சனாதன தர்மம் ஆட்சி செய்யும் என இன்று காங்கிரஸ் கூறுகிறது. அதிலும், லக்ஷர்-இ-தொய்பா அமைப்பை விட, இந்து அமைப்புகள் மிகவும் ஆபத்தானது என ராகுல் காந்தி கூறி உள்ளார். ராகுல் காந்தி, லக்ஷர்-இ-தொய்பா அமைப்புடன் இந்து அமைப்புகளை ஒப்பிடுகிறார்.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் சிகப்பு நிற ஆடைகளை யாராவது அணிந்திருந்தாலும், அதில் ரெட் டைரியயேக் (Red Diary) காண்கிறார். ஏனென்றால் அதில் சுரங்கம், ஆசிரியர்கள் ஊழல் தொடர்பான விபரங்கள் உள்ளன. இன்று பரிவர்தன் யாத்திரையின் இரண்டாவது பகுதி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த யாத்திரை மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் 52 சட்டமன்றத் தொகுதிகளை, 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 19 நாட்களில் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிவர்தன் யாத்திரை முடியும்போது, அசோக் கெலாட் அரசு நீக்கப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சம உரிமை மற்றும் சமூக நீதிக்கு சனாதன தர்மம் எதிரானது என்றும், எனவே அதனை எதிர்த்தால் மட்டும் போதாது, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறி இருந்தார். மேலும், டெங்கு, கரோனா போன்றவற்றை ஒழித்துக்கட்ட முயற்சிப்பது போன்றுதான் சனாதன தர்மமும் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: "சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!