ETV Bharat / bharat

தடுப்பூசி திட்டம் தொடர்பாக மத்திய - மகாராஷ்டிரா அரசுகளுக்கு இடையே பூசல்

தடுப்பூசி கையிருப்பு தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் இடையே பூசல் நிலவிவருகிறது.

Omicron surge
Omicron surge
author img

By

Published : Jan 15, 2022, 12:12 PM IST

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் 43,211 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 658ஆக உள்ளது.

இந்த சூழலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி திட்டம் செயல்படுவது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசிடம் கையிருப்பில் சுமார் 24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் உள்ளது எனவும் கூடுதலாக 6.35 லட்சம் டோஸ்கள் உடனடியாக வழங்கப்படவுள்ளது.

அதேபோல் சுமார் ஒரு கோடியே 24 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிஷீல்டு டோஸ்கள் மகாராஷ்டிரா வசம் உள்ளது. எனவே அடுத்த பத்து நாள்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மகாராஷ்டிரா அரசிடம் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Goa election 2022: பாஜக வேட்பாளர் தேர்வுக்கு எதிராக மனோகர் பாரிக்கர் மகன் போர்க்கொடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.