டெல்லி விமான நிலையத்தில் விமான உள்புறங்களைச் சுத்தம், கிருமி நீக்கம் செய்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரோபோ தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளது. இதற்காக, ஏஐஐசாட்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்கிறது.
இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "யு.வி. கிருமி நீக்கம் விளக்கு அமைப்பு கொண்ட யு.வி. ரோபோடிக் சாதனமானது, டெல்லி விமான நிலையத்தில் உள்ள போயிங் 737-800 விமானங்களை கிருமி நீக்கம் செய்வதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்தத் தொழில்நுட்பம் உலகளவில் கிருமிநாசினியின் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றிலிருந்து மேற்பரப்புகளை பாதுகாப்பதாக என்ஏபிஎல் ஆய்வகத்தால் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் உள்புறம் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுத்தம்செய்யும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்தத் தொழில்நுட்பத்தை ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.