டெல்லி: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் ஷர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி மீதும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதியை குலைக்கும் வகையிலும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் கருத்துப்பதிவிட்டதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே உள்ள காவல்நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க:இந்திய ராணுவ அகாடமியில் புதிதாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படவில்லை!