அசாம்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறப்போவதாக பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 28) அசாமில் நடந்த ஊர்வலத்தின் முடிவில் பேசிய போது தெரிவித்தார். இந்திய சுதந்திரம் அடைந்த பின் வகுப்புவாத பிரிவினை வாதிகளை கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்ட AFSPA சட்டத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட அசாம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களின் மீதமுள்ள மாவட்டங்களில் இருந்தும் இந்த சட்டத்தை திரும்பபெற போவதாக மோடி அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கர்பி அங்கலாக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 8 ஆண்டுகளில் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தின் பிற பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீரான நிலையில் இருந்து வந்ததால், ஏற்கனவே கணிசமான பகுதிகளில் இருந்து AFSPA நீக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் வன்முறை சம்பவங்கள் 75 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு மாறிவரும் நிலை உருவாகியுள்ளது’ என கூறினார்.
மேலும் "அசாமில் கடந்த 30 ஆண்டுகளாக AFSPA அமலில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாததால், கடந்த காலங்களில் அரசாங்கம் சட்டத்தை நீட்டித்து வந்தது. இருப்பினும், கடந்த 8 ஆண்டுகளில் நிலைமை முன்னேறியுள்ளது. எனவே AFSPA-ஐ நீக்கியுள்ளோம். அஸ்ஸாமில் உள்ள 23 மாவட்டங்களில் இருந்து, திரிபுரா மற்றும் மேகாலயாவில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளதால், AFSPA ஐ அகற்றியுள்ளோம்," என மோடி கூறினார்.
இதையும் படிங்க:உ.பி.யில் மசூதிகளில் ஒலி பெருக்கி அகற்றம் - ராஜ் தாக்ரே பாராட்டு!