2018ஆம் ஆண்டு உள் அலங்கார வடிவமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட கோஸ்வாமி நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா சதனுக்கு வெளியே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போராட்டம் செய்ததாக ஏபிவிபி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்' உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் உள்ளடங்கிய பலகைகளை போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர். மேலும், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.