உச்ச நீதிமன்றத்தில் சித்தார்த்சங்கர் சர்மா என்பவர் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடர்பாக பொதுநல நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கோவிட்-19 தடுப்பூசிக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக இணையதளமான கோவின் தளத்தில் தடுப்பூசி செலுத்த ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும் என உள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரியிருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதிலில், கோவின் தளத்தில் ஆதார் எண் கட்டாயம் எனக் கூறப்படவில்லை.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் எண்ணுடன், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ரோஷன் கார்டு என்ற ஆவணங்களும் உள்ளன. அத்துடன் ஆவணங்கள் இல்லாமல் சுமார் 87 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என பதிலளித்துள்ளது.
இதன் மூலம் தடுப்பூசி செலுத்த ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து மனுவை தள்ளுபடி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் சாந்திஸ்ரீ