கர்நாடகா: குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள அங்குசாபூர் என்ற கிராமத்தில், பாக்கி பிஸ்வாஸ்(8), வர்ஷா பிஸ்வாஸ் ஆகிய இரண்டு சகோதரிகள், வீட்டருகே கட்டப்பட்டிருந்த புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஊஞ்சல் உயரத்தில் இருந்ததால், நாற்காலியை போட்டு ஏறி ஊஞ்சலில் ஆடியுள்ளனர்.
பாக்கி பிஸ்வாஸ் ஊஞ்சலில் ஏற முயன்றபோது, திடீரென நாற்காலி சரிந்து விழுந்ததால், புடவை சிறுமியின் கழுத்தில் மாட்டிக் கொண்டது. இதைக் கண்ட வர்ஷா, தங்கையை மீட்க முயற்சித்தார். ஆனால், புடவை கழுத்தில் இறுகி சிறுமி பாக்கி பிஸ்வாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
வர்ஷா தனது தங்கையை காப்பாற்ற முயன்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை அப்பகுதி மக்கள் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. தங்கையைக் காப்பாற்ற வர்ஷா போராடிக் கொண்டிருந்தபோது, அவளை காப்பாற்றாமல் புகைப்படம் எடுப்பது எத்தகைய மனநிலை? என்ற கேள்வி எழுகிறது.
சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:மூன்று வயது மகளை கொலை செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை