புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிடுள்ளது. அதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணமாக 2019- 20 கல்வியாண்டுக்கான கட்டண குழுவில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அடிப்படையில் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ச்சியான, அசாதாரண கரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு புதுச்சேரி யூனியன் இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 2021-22 கல்வியாண்டுக்கான கட்டணமாக பெற்றோர்களிடமிருந்து 2019-20 கல்வியாண்டிற்கான கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை இரண்டு, அதற்கு மேற்பட்ட தவணைகளில் மூலம் வசூலிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
மேலும், வருடாந்திர கட்டணம், பஸ் கட்டணம், சீருடை கட்டணம், கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைக்கான கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வகக் கட்டணம், நுண்கலை கட்டணம் மருத்துவக் கட்டணம், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணம் போன்ற வேறு எந்த கட்டணத்தையும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்குவரை வசூலிக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணத்துக்காக 14 வயது சிறுமியை தந்தையே விற்ற அவலம்!