புதுச்சேரி: பாமக உயர்மட்ட குழு கூட்டம் தனியார் ஹோட்டலில் இன்று (ஆக.14) நடைபெற்றது. புதுச்சேரி மாநில அமைப்பாளர் முனைவர் கோ. தன்ராஜ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடாக 10.5 விழுக்காடு பெற்றுத்தந்த மருத்துவர் ராமதாஜூக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த ஆண்டு முதலே அரசு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் கரோனா தடுப்பு, சிகிச்சைகளை பாராட்டி தீர்மானம். புதுவை பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தினர். விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை தடையின்றி கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும், காவிரி கடைமடையில் நெல் களஞ்சியம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
இதையும் படிங்க: வேளாண் வளர்ச்சித்திடல் அமைப்பு திட்டத்துக்கு வரவேற்பு