ஜம்மு: பூஞ்ச் மாவட்டத்தில் ஜம்முவின் எல்லைக் கோட்டில் இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினருக்கிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. கடந்த இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் குழுவின் மான்கோட் துறையில் பொதுமக்களின் இருப்பிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நேற்று (டிச. 10) துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியது. இதில் பொதுமக்களின் உடைமைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுக்கும்வகையில், இன்று (டிச. 11) இரண்டு மணி நேரமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலில் பல பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
2020 ஜனவரியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் நடத்திய 3,200-க்கும் மேற்பட்ட போர்நிறுத்த மீறல்களில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகை சித்ரா மரணம் குறித்து செல்போன், சிசிடிவி கேமரா ஆய்வு!