ஜப்பானின் ஷிமோகிடா மாவட்டத்தில் உள்ள அமோரி என்ற இடத்தில் இன்று (ஜூலை 26) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 என்று பதிவாகியுள்ளது.
இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம், "உள்நாட்டு நேரப்படி இன்று காலை 11.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் மையப்பகுதி வடக்கே 41.4 டிகிரி அட்சரேகை, கிழக்கு 142.1 டிகிரி தீர்க்கரேகை என்ற நிலையில் சுமார் 70 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை அங்கு சுனாமி எச்சரிக்கை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் நில அதிர்வு