மொராதாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நேற்றிரவு(ஆகஸ்ட் 25) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டுவந்த குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 2ஆவது மாடிக்கு தீ பரவியுள்ளது. அப்போது அங்கிருந்த இருந்த எப்தா (5), சுபியா (7), உமேயா (12), ஷாமா பர்வீன் (36), கமர் ஜஹான் (75) உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இந்த குடோன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து... செவிலியர் உட்பட இருவர் உயிரிழப்பு