இந்தியாவில் கரோனா தொற்றால் நேற்று மட்டும் 131 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 13 ஆயிரத்து 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 37 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 182 பேர் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போதுவரை 1 கோடியே 3 லட்சத்து 30 ஆயிரத்து 84 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், ஜன.24ஆம் தேதிவரை 19 கோடியே 23 லட்சத்து 37 ஆயிரத்து 117 பேருக்கு கரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட குறைந்த அளவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு பாதிப்பா? - மருத்துவர்கள் விளக்கம்!