ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் திருப்பதியில் ரூயா அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா வார்டில் 130 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்ஸிஜன் விநியோகம் 40 நிமிடம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மாற்றுவதில் கால தாமதமானது. இதனால், நோயாளிகள் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் பெண் உயிரிழப்பு!