ETV Bharat / bharat

தொலைத் தொடர்பு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் - ஸ்பெக்டரம் ஏலம்

தொலைத் தொடர்பு துறையில் 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
author img

By

Published : Sep 15, 2021, 8:16 PM IST

டெல்லி: தொலைத் தொடர்பு துறையில் அமைப்பு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று (செப்.15) ஒப்புதல் அளித்துள்ளது

இந்த சீர்திருத்தங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும், முதலீட்டை ஊக்குவிக்கும், தொலை தொடர்பு சேவை அளிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி, வீட்டிலிருந்தே பணியாற்றுதல், காணொலி கூட்டம் ஆகியவற்றால் இணையதள டேட்டா பயனாளர்கள் அதிகரித்துள்ளதால் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள், பிராட் பேண்ட் வேகம், தொலை தொடர்பு சேவையை மேலும் மேம்படுத்தும்.

இந்த கூட்டத்தில் ஒன்பது அமைப்பு சீர்திருத்தங்கள், ஐந்து செயல்பாட்டு சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் எடுக்கும் காலம் 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக அதிகரிப்பு. தொலை தொடர்பு கோபுரங்களுக்கான ஒப்புதல்கள் எளிமையாக்கப்படும்.

தொலை தொடர்பு சேவை அளிப்பவர்கள், கடந்த ஏலங்களில் எடுத்த அலைக்கற்றைக்கான கட்டணங்களை, வட்டியுடன் நான்கு ஆண்டுகள் வரை காலம் தாழ்த்தி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சோனு சூட் அலுவலகத்தில் வருமானவரி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.