ETV Bharat / snippets

வேலூரில் திடீரென சாய்ந்து விழுந்த மரம்.. தள்ளுவண்டி கடை நசுங்கியதால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 16 hours ago

மழைக்கு விழுந்த மரம்
மழைக்கு விழுந்த மரம் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயர மரம், இன்று காலை 6 மணியளவில் திடீரென சலையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் மேல் விழுந்துள்ளது. அதில், மரத்தின் கனம் தாங்காமல் மரத்துடன் சேர்ந்து மின் கம்பமும் சாலையில் இருந்த தள்ளுவண்டி கடை மேல் விழுந்துள்ளது.

பின்னர் அப்பகுதியினர், மின்வாரிய அலுவலகத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, யாரேனும் சிக்கியுள்ளனரா? என சோதனை செய்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில், மரம் விழும் நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இயந்திரத்தை வைத்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.