சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை அளித்தார். அதில் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள் மேம்படுத்தப்படும். 16 புதிய பள்ளி கட்டிடங்கள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மேலும் பள்ளியில் 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். 14 புதிய பூங்காக்கள் மற்றும் ஆறு நவீன விளையாட்டு திடல்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் புதிய பாலம், மேம்பாலங்கள், 10 நீர்நிலைகள் கட்டப்படும். மேலும் இவை 12 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். முக்கியமாகக் கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூபாய் 75 கோடி கட்டப்படும், அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.