நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கனமழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று குன்னூர் பகுதியில் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்ததால், காலை 7:10 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலாp பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், ஹில்க்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாறை உடைக்கப்பட்டு அகற்றிய பின், மலை ரயில் குன்னூர் நோக்கிs செல்ல உள்ளதாகவும், இதன் காரணமாக ரயில் தாமதம் ஆகும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் பணிகள் நிறைவடைந்து, ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே நிர்வாகம் உறுதியளித்து உள்ளது.