தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் இன்று மாற்று திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். தேர்வு முகாமிற்கு மாற்றுத் திறனாளிகள் அதிக அளவு வந்திருந்ததன் காரணமாக இருக்கை வசதிகள் இல்லாமல், அலுவலகக் கூட்ட அரங்கில் தரையில் உட்காரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகக் கூட்ட அரங்கம் நிரம்பி வழிந்ததன் காரணமாக, மாற்றுத்திறனாளிகள் நுழைவு வாயிலில் அமர்ந்திருந்ததுடன், ஆங்காங்கே உள்ள மர நிழல்களிலும் தங்களது இருசக்கர வாகனத்துடன் அமர்ந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாமில் முறையான இடவசதி ஏற்படுத்தாமல் மற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாயுள்ளன. பகுதி வாரியாக முகாமை நடத்தாமல், அடிப்படை வசதிகள் செய்யாமல் மாற்று திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் அலட்சியமாக முகாமை நடத்துகிறார் என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.