ETV Bharat / state

கலைஞர் 100 வினாடி வினா: “எங்கே திராவிடப் பட்டாளம்?” என்பவர்களுக்கு “இதோ இங்கே!” - கனிமொழியைப் புகழ்ந்த முதல்வர் - KALAIGNAR 100 VINADI VINA

கலைஞர் 100 வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திடாவிட என்சைக்ளோபீடியாக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) புகழாரம் சூட்டினார்.

கலைஞர் 100 வினாடி வினா போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மேடையில் உடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி
கலைஞர் 100 வினாடி வினா போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மேடையில் உடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 10:41 AM IST

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது பேசிய அவர், “இந்த வினாடி வினா போட்டியை நடத்தி “எங்கே திராவிடப் பட்டாளம்?” என்று கேட்பவர்களுக்கு “இதோ இங்கே!” என்று அடையாளம் காட்டியிருக்கிறார் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி.

‘கலைஞர் 100’ மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் ‘கலைஞர் 1000’ கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார்.

இந்த போட்டியை நடத்த எடுத்த முயற்சி குறித்து கேட்டேன். அப்போது கனிமொழி கூறுகையில் கேள்விகளை உருவாக்க 15 பேர் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழு 250 புத்தகங்களை ஆய்வு செய்து, திராவிட இயக்கத்தின் வரலாறு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஆகியோரின் வாழ்வு மற்றும் தொண்டு உள்பட பல திராவிடம் தொடர்பானவை குறித்து இந்த போட்டி நடத்தப்பட்டதாக கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேயில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளது விழாவின் சிறப்பு. அனைத்து வெற்றியாளர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நீங்கள் அனைவருமே இப்போது ஒரு 'திடாவிட என்சைக்ளோபீடியாக்கள்' (Dravidian Encyclopedia).

இதையும் படிங்க: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு செவிலியர் காலணி எடுத்து போட்ட விவகாரம்!

சில நாட்களுக்கு முன்னர், இதே கலைஞர் அரங்கில் உதயநிதி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ இறுதிப் பேச்சுப் போட்டிக்கு 182 பேர் கூடினார்கள். அதில் இருந்து மூவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த 182 பேரும் இப்போது தமிழ்நாட்டு மேடைகளில் முழங்கும் பேச்சுப் போராளிகளாக வலம் வருகின்றனர்.

முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், இரண்டாம் பரிசு 6 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு 3 லட்சம் ரூபாயும், நான்காம் பரிசு ஒரு லட்சம் ரூபாயும், வெற்றியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். உங்களைப் போலவே பலரையும் உருவாக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது வாட்ஸ்அப் யுகம், வாட்ஸ்ஆப்-இல், யாரோ ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும்” என்றார். இதையடுத்து அவையில் இருந்த போட்டியாளர்களை நோக்கி முதலமைச்சர் ஒரு சில கேள்விகளை கேட்டு, பின் அதற்கான பதில்களை விளக்கினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.