ஐதராபாத்: சையது முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று (நவ.23) இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குஜராத் அணிக்கு எதிராக பரோடா வீரர் ஹர்திக் பாண்ட்யா 7 ரன்கள் அடித்த போது 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் புது மைல்கல் ஒன்றை படைத்தார்.
20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரம் மற்றும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்த முதல் இந்திய வீரர் என்ற புது சாதனையை படைத்தார். 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் மட்டும் ஹர்திக் பாண்ட்யா இதுவரை 5 ஆயிரத்து 67 ரன்களும், 180 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 3 ஆயிரத்து 684 ரன்களும், 225 விக்கெட்டுகளும் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
Indore is treated to a Hardik Pandya special 🤩
— BCCI Domestic (@BCCIdomestic) November 23, 2024
An unbeaten 74*(35) from him guides Baroda to a successful chase 👏👏
Vishnu Solanki with the winning runs 👌👌
Scorecard ▶️ https://t.co/jxHL7n3rjO#SMAT | @IDFCFirstBank pic.twitter.com/K7uLdjZW42
மூன்றாவது இடத்தில் அக்சர் பட்டேல் 2 ஆயிரத்து 960 ரன்கள் மற்றும் 227 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குர்னல் பாண்ட்யா 2 ஆயிரத்து 712 ரன், 138 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர். முன்னதாக டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் தொடக்க வீரர் ஆர்யா தேசாய் 78 ரன்களும், கேப்டன் அக்சர் பட்டேல் 43 ரன்களும் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய பரோடா அணி 19.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரோடா அணியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சர்கள் அடித்து 74 ரன்கள் விளாசினார்.
Hardik Pandya gets to his FIFTY in style 💥💥
— BCCI Domestic (@BCCIdomestic) November 23, 2024
Baroda need 11 off 9 deliveries to win!
Follow The Match ▶️ https://t.co/jxHL7n3rjO#SMAT | @IDFCFirstBank | @hardikpandya7 pic.twitter.com/C3wbj0Mx05
ஷிவாலிக் சர்மா 64 ரன்கள் குவித்தார். 31 வயதான ஹர்திக் பாண்ட்யா அண்மையில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று: கத்தார் அணியிடம் இந்தியா போராடித் தோல்வி!