காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக ஒரு மாதத்திற்கு இந்த பானம் குடித்து வந்தால், உடல் சோர்வு, இடுப்பு வலி, கை-கால் வலி, மூட்டு வலி, மலச்சிக்கல் போன்ற அனைத்தும் நீங்கி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எலும்பு தேய்மானம் பிரச்ச்னை இருப்பவர்கள் கண்டிப்பாக குடிக்க வேண்டிய ஹெல்த் ட்ரிங்கை எப்படி தயார் செய்வது என பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- ஜவ்வரிசி - 100 கிராம்
- கருப்பு எள் - 100 கிராம்
- கருப்பு உளுந்து - 200 கிராம்
- பார்லி - 100 கிராம்
- ஏலக்காய் - 6
- சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும். பின்னர், ஜவ்வரிசியை மிதமான தீயில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அடுத்ததாக, எள் சேர்த்து மனம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- அதனை தொடர்ந்து, கருப்பு உளுந்து, பார்லி என ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பார்லி வறுக்கும் போது, விருப்பப்பட்டால் வாசனைக்காக ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
- இவற்றை நன்கு ஆற வைத்த பின்னர், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும். இப்போது, அரைத்து வைத்த பொடியுடன் சுக்கு பொடி சேர்த்து கலந்து காற்று புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்துவது எப்படி?: ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த பவுடர் மற்றும் அதனுடன் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, கால் கிளாஸ் தண்ணீர், ஒரு கிளாஸ் பால் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
பால் பொங்கி வரும் போது, நாம் கரைத்து வைத்ததை கைவிடாமல் 5 நிமிடங்களுக்கு கிளறி அடுப்பை அணைத்து கிளாஸிற்கு மாற்றவும்.( அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும்) பின்னர், சுவைக்காக, நாட்டுசர்க்கரை சேர்த்து தினசரி காலையில் டீ, காபிற்கு பதிலாக குடித்து வந்தால் இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
பயன்கள்:
ஜவ்வரிசி: ஜவ்வரிசியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது. குறிப்பாக, அதிகளவில் சுண்ணாம்பு சத்து உள்ளதால், எலும்பு தேய்மானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும்.
எள்: அதிகப்படியான கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களை எள் கொண்டுள்ளது. கர்ப்பப்பையிற்கு நன்கு வலு சேர்ப்பதோடு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும். இடுப்பு, கை கால் வலியினால் அவதிப்படுபவர்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது.
கருப்பு உளுந்து: எலும்பு தேய்மானத்தை சரி செய்யக்கூடிய தன்மை கருப்பு உளுந்திற்கு இருக்கிறது. பெண்களின் இடுப்பு எலும்பு ஆரோக்கியமாக இருக்க, பெண்கள் வயதிற்கு வந்தப்பின் உளுந்தில் களி செய்து கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் 3 சூப்பர் டீடாக்ஸ் டிரிங்ஸ்..எப்படி குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க! தினசரி 1 ஷாட் பீட்ரூட் ஜூஸ் போதும்..இந்த பிரச்சனைகள் எல்லாம் ஓடிவிடும்! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்