ETV Bharat / state

பல்கலை மாணவி சம்பவம்: 'பிள்ளைகள் சமுதாய ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்' - மதுரை ஆதீனம் அறிவுரை - MADURAI AADHEENAM

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளை அரசு மட்டுமே தடுத்து நிறுத்த முடியாது, குழந்தைகளின் பெற்றோரும் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம், அண்ணா பல்கலை
மதுரை ஆதீனம், அண்ணா பல்கலை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 4:49 PM IST

திருநெல்வேலி: சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், பிரச்சனைகளை அரசு மட்டுமே தடுத்து நிறுத்த முடியாது, சமய ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்தோடு பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுன் கோளரிநாத ஆதின குருபூஜை விழா இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் குருபூஜை கொலு காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், அவிநாசி ஆதீனம், கர்நாடக ஆதீனம் உள்ளிட்ட 13 மடங்களின் ஆதீன கர்த்தர்கள், பீடாதிபதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்ததேசிகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தாமிரபரணி ஆற்றை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தூய்மைப்படுத்த வேண்டும். ஆற்றில் கழிவுகள் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசும், அறநிலைய துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டங்கள் கோவில்களில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஆதீனத்திற்கு சொத்துக்கள் அதிகமாக உள்ளது ஆனால் குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.

இதையும் படிங்க: யார் அந்த சார்..? எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது என்ன..? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கிளம்பும் கேள்விகள்!

என்னுடைய இயற்பெயர் பகவதி பாபு, அமைச்சர் பெயர் சேகர்பாபு. இரண்டு பாபுவும் இணைந்து குத்தகை பணம் செலுத்தாதவர்களுக்கு ஒரு ஆப்பு அடிக்க வேண்டும். அவர்களுக்கு காப்பு அணிவிக்க வேண்டும். யானைகளை முகாம்களுக்கு அனுப்புவது குறித்து அமைச்சருடன் பேசியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மனிதனே மதம் பிடித்து அலைகிறான். பெண் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துகிறான். அது (யானை) மிருகம், என்ன செய்யும் நீங்கள் தவறு செய்தால் அதுவும் தாக்குதல் நடத்தும்'' என்றார்.

தொடர்ந்து கல்லூரிகளில் பாலியல் சம்பவங்கள் நடப்பது தொடர்பான கேள்விக்கு, அரசே அனைத்தையும் செய்ய முடியாது.. பெற்றோர்களும் பிள்ளைகளை கவனிக்க வேண்டும்.. சமய ஒழுக்கம், சமுதாய ஒழுக்கத்தோடு பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும்'' என பதிலளித்தார்.

பின்னர் தமிழக அரசு செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, ''என்ன எனக்கு ஆப்பு அடிக்கவா'' என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.