ETV Bharat / state

"உணர்வற்ற காவல்துறையை கொண்ட உணர்வற்ற அரசு"-மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து வானதி சீனிவாசன் சாடல்! - VANATHI SRINIVASAN SLAMS

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன் வருவதில்லை. விவரங்கள் வெளியில் வருவதால் பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பது இன்சென்சிவிட்டி போலிஸ், இன்சென்சிட்டிவ் அரசாங்கம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சாடினார்.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 14 hours ago

கோவை: தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன் வருவதில்லை. விவரங்கள் வெளியில் வருவதால் பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பது இன்சென்சிவிட்டி போலிஸ், இன்சென்சிட்டிவ் அரசாங்கம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சாடினார்.

கோவை சிவானந்தா காலனி அடுத்த ஹோஸ்மின் நகரில் கோவை மக்கள் சேவை மையம் சார்பாக 50 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்,"தமிழகம் ஒரு பாதுகாப்பான மாநிலம். பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறந்த இடத்தை கொடுக்கின்ற மாநிலமாக இருக்கின்ற பெயர் தமிழகத்திற்கு எப்பொழுதும் உண்டு. அதிகமாக உயர்கல்வி கற்கக்கூடிய பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்கின்ற பெண்கள் என பெண்களுக்கு உயர்ந்த ஸ்தானத்தை அளிக்கின்ற மாநிலம். அதே நேரத்தில் திமுக அரசின் கீழ் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற கிரிமினல் சம்பவங்கள் அதிர்ச்சியை உருவாக்குவதாக உள்ளது.

கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் ,பொது போக்குவரத்து பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகின்ற பொழுது மாநில அரசு பெண்களின் பாதுகாப்பில் கவலைப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் திமுக நிர்வாகி், அவர் துணை முதல்வரை சந்திக்க கூடிய அளவிற்கு முக்கியமான பொறுப்பை திமுகவில் வகிக்கிறார்.

இதையும் படிங்க: விடுதி மாணவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது... அண்ணா பல்கலை புதிய கட்டுப்பாடு!

குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் கட்சியின் பொறுப்புகளையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக குற்ற செயல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்ற துணிச்சலோடு இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். மாநிலத்தின் முதல்வர், அதிகாரத்திற்கு நெருக்கமாக இருக்கின்ற நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது எந்த ஒரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் அவர்கள் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கையே அவர்களுக்கு எச்சரிக்கையை கொடுக்கும்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தார்மீக ரீதியாக பாஜக மகளிர் அணியும் உடன் நிற்கிறது.அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியில் வந்திருப்பதன் மூலம் காவல்துறைக்கு அது பற்றிய சென்சிட்டிவிட்டி கிடையாது என்பது தெரிய வருகிறது. விவரங்கள் வெளியில் வருவதால் பெண்கள் மிரட்டப்படுகிறார்கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகின்றனர். இன்சென்சிவிட்டி போலிஸ், இன்சென்சிட்டிவ் அரசாங்கம்,"என்றார். இந்த நிகழ்வில் ஒருவர் வானதி சீனிவாசனின் அடுத்த ஜெயலலிதா என்று புகழ்ந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, "ஆளை விடுங்கள் செய்தியாளர் சந்திப்பு முடிந்தது,"என புறப்பட்டு சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.