வால்பாறையில் வாலிபர்களை ஆக்ரோஷமாக துரத்திய ஒற்றை காட்டு யானை.. வீடியோ வைரல்! - elephant chasing video
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறை - பொள்ளாச்சி இடையேயான சாலையில் காட்டு யானையை வாகன ஓட்டிகள் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வன விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி இடையேயான சாலையில் உள்ள சோலைகுறுக்கு பகுதியில், கடந்த ஒரு வாரமாக ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை துரத்திச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அச்சுறுத்தும் காட்டு யானையை, கும்கி யானைகளின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.